Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

AI என்பதை SI என மாற்ற திட்டம்

AI என்பதை SI என மாற்ற திட்டம்

செயற்கை நுண்ணறிவு என்ற பெயர் தவறானது, அதற்கு பதிலாக ‘சூப்பர் இன்டலிஜென்ஸ்’ என பயன்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அரசு ஆவணங்களில் ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence – AI) என்ற சொல்லையும், அதன் சுருக்கமான ‘ஏஐ’ என்ற வார்த்தையையும் பயன்படுத்தத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலா, ‘சூப்பர் இன்டலிஜென்ஸ்’ (Super Intelligence – SI) என்ற சொல்லைப் பயன்படுத்துமாறு அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை தொழில்நுட்ப உலகில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: 

செயற்கை நுண்ணறிவு என்ற பெயர் தவறானது. தொழில்நுட்பத்தின் உண்மையான திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ‘சூப்பர் இன்டலிஜென்ஸ்’ என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும்.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எப்போது செயற்கை நுண்ணறிவு என்ற தவறான, பொருத்தமற்ற பெயரை ‘சூப்பர் இன்டலிஜென்ஸ்’ என்று அழைக்கத் தொடங்கும்? மற்ற அனைவரும் இந்த சொல்லை விரைவில் பயன்படுத்தத் தொடங்குவார்கள்.

விரைவில், அனைத்து அரசு ஆவணங்களிலும் ‘AI/Artificial Intelligence’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை அதிகாரப்பூர்வமாகத் தடை செய்வோம். இந்தப் பெயர் துல்லியமானதல்ல என்பதால், மற்ற இடங்களிலும் இதைத் தவிர்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு திடீரென எடுக்கப்பட்ட முடிவு மட்டுமல்ல. இதற்கு முன்னதாகவே, அமெரிக்காவின் நிர்வாகத் துறைகள் தங்களது அதிகாரப்பூர்வத் தகவல்தொடர்புகளில் ‘எஸ்ஐ’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
Kotak raises FY27 crude oil forecast to $100
அடுத்த செய்தி
CM Vijay to roll out ₹1,000-crore welfare aid in Erode

தொடர்புடைய செய்திகள்